ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடும் விவகாரம்: தீபாவின் மனு தள்ளுபடி..!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (18:34 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற அவரது அண்ணன் மகள் தீபாவின் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துக்களை ஏலம் விடுவது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் சற்று முன் தள்ளுபடி செய்தது. மேலும் சொத்துக்கள் ஏலம் விட வேண்டிய  ஜெயலலிதாவின் சொத்துக்களை தற்போதைய மதிப்பை கணக்கிட்டு தாக்கல் செய்ய 35 நாட்கள் கால அவகாசம் வழங்கி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்