அப்போது, ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். அவர் கூறியதாவது, இந்த இக்கட்டான காலகட்டத்தில் எவ்வளவு நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு கொடுப்பது என்பதைப் பற்றி கூறாமல் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசி வருகிறார், இதனை விஞ்ஞானிகள் கேட்டால் ஏமாற்றமடைவார்கள் என்று விமர்சித்துள்ளார்.