கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரம் தான் முக்கியம்: காவிரி விவகாரம் குறித்து டி.கே.சிவகுமார்

புதன், 23 ஆகஸ்ட் 2023 (13:38 IST)
காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
 
 இன்று கர்நாடக மாநிலத்தில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில்  முதலமைச்சர் துணை முதலமைச்சர் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
 
இந்த கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கர்நாடக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்று தெரிவித்தார். 
 
மேலும் காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்து கட்சி தலைவர்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்