அதன்படி, கர்நாடகம் மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,304 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து கர்நாடகம் பகுதிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதில், கர்நாடகம் அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இதனால், தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் பட்சத்தில் கர்நாடகம் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என்பதில், அரசு உறுதியாக இருக்க வேண்டுமென்று முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளார்.