ஜெ. ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் அமைச்சராகி இருப்பேன்: கருணாஸ்

புதன், 30 மே 2018 (14:25 IST)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நடத்திய போட்டி சட்டசபை கூட்டத்தில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜெயலலிதா இருக்கும்போது வெளி மாவட்டம் செல்ல காவல்துறை பாதுகாப்பு எனக்கு இருந்தது. ஆனால் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேரவையில் பேசியதால் எனக்கு பாதுகாப்பை விலக்கிவிட்டார்கள். தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது என அரசு நினைக்கிறது 
 
தமிழக முதல்வராக இருக்கும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய கேவலம். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை அமைக்க வேண்டும்
 
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன். மேலும் கூவத்தூரில் என்ன நடந்தது என்பதற்கு நானே ஆதாரம். எனக்கு தெரியும் அங்கு என்ன நடந்தது என்று. தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன்.
 
இவ்வாறு கருணாஸ் பேசினார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்