இந்த நிலையில், கபாலி படத்தை வரவேற்கும் விதமாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினியை பெருமைபடுத்தும் விதமாகவும், மதுரை புட்டுத்தோப்பு சாலைையில் கேப்ரன்ஹால் என்ற பள்ளி அருகே ரஜினி ரசிகர்கள் சார்பில் கபாலி பட ஓவியம் மிக அழகாக வரையப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பலரும் இந்த ஓவியத்தை பார்த்து வியக்கின்றனர். இந்த ஓவியம் பலரையும் கவர்ந்துள்ளது என்பது தான் சிறப்பு.