ஷோகேஸ் பொம்மையை ரேப் செய்த காமுக கொள்ளையன்..! – குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளி, 15 ஜூலை 2022 (09:43 IST)
கன்னியாக்குமரியில் ஆடையகம் ஒன்றில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையன் ஒருவன் பணம் கிடைக்காத விரக்தியில் அங்கிருந்த ஷோகேஸ் பொம்மையை சுய இன்பம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் ஆண்களை ஆடையகம் ஒன்றை ஜோசப் பவின் என்ற நபர் நடத்தி வருகிறார். வழக்கம்போல இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் காலை கடையை திறந்தபோது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீஸார், கொள்ளையனுக்கு கடையில் பணம் கிடைக்காததால் அங்கிருந்த விலை உயர்ந்த ஆடைகளை திருடி சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் ஆடைகளை திருடியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த ஆண் ஷோகேஸ் பொம்மை ஒன்றின் ஆடைகளை கழற்றி அதனுடன் சுய இன்பத்திலும் கொள்ளையன் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொள்ளையனை போலீஸார் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்