இருளில் மூழ்கிய கன்னியாகுமரி: என்ன செய்கிறது தமிழக அரசு??

சனி, 2 டிசம்பர் 2017 (11:01 IST)
ஓகி புயல் ஓய்ந்தாலும் அதன் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
ஓகி புயலால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மூன்றாவது நாளாக இருளில் மூழ்கியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம்.
 
திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். உணவுக்காகவும், பாலுக்காகவும் அலைந்து வருவதாகவும் மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
 
வீடுகளில் தஞ்சம் அடைந்தவர்களை நாட்டு படகு, ரப்பர் படகுகளில் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
3வது நாளாகவும் மழை தொடர்வதால் மீட்டு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று மாலைக்குள் 60 சதவிகித இடங்களில் மின்வினியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஒக்கி புயலால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். புயல் பாதிப்புக்கு உள்ளான தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்