பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, கஞ்சா கருப்பு வெளியேறுவதாக நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல் அறிவித்தார். உடனே எழுந்த கஞ்சா கருப்பு மற்ற போட்டியாளர்களிடம் தான் விடைபெறுவதாக கூறி ஒவ்வொருவராக கட்டி தழுவினார். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு ஓவியாவுடன் குத்தாட்டம் போட்டுவிட்டு கிளம்பினார் .
அந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாலும், அவர் வீடு திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அவர் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சி வழங்கியுள்ள அறையிலேயே இருப்பார் எனவும் செய்தி வெளியானது. ஒரு பிரபல வார இதழ் நிருபர் தொலைப்பேசியில் பேசியபோது, கஞ்சா கருப்பே இதை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் மீண்டும் பங்கு கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், வாரத்திற்கு ஒருவரைத்தான் வெளியேற்ற முடியும். ஏற்கனவே பரணியை அனுப்பி விட்டார்கள். தற்போதும் கஞ்சா கருப்பும் போய்விட்டால் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். அவருக்கு பதிலாக மற்றொருவரையும் அழைத்து வர முடியாது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருப்பவர்களில், 11 பேருக்கு கஞ்சா கருப்புவை பிடித்திருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கு பெற கஞ்சா கருப்பு ஆர்வமாகவே இருக்கிறார். எனவே, விரைவில் அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.