இந்த நிலையில் முதல்கட்ட நிவாரண தொகை மிகவும் குறைந்த தொகை என தமிழக அரசியல் கட்சிகள் காட்டமாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, 'உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோவை செந்தமிழ் மாநாடு நடத்த திமுக, அரசு பணத்தை ரூ.400 கோடி செலவு செய்ததாகவும், ஆனால் கஜா புயலுக்கு திமுகவின் சார்பில் கொடுத்த தொகை எவ்வளவு என்றும், நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு ஆறு கோடி ரூபாய் செலவு செய்த திமுக அரசு, கஜா புயலுக்கு மட்டும் ரூ.1 கோடி நிவாரண நிதி கொடுத்துள்ளது ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.