இந்நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய ஸ்டாலின், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இன்று அளித்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனிடையே கனிமொழி தனக்கு பொருளாளர் பதவி வழங்காததால், ஸ்டாலினுடன் சண்டையிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதேபோல் இன்று காலை கருணாநிதியின் சமாதிக்கும் கோபாலபுரத்துக்கும் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
அதனை பொய் என நிரூபிக்கும் வகையில் கனிமொழி ரக்ஷா பந்ததனுக்கு வாழ்த்து தெரிவித்தும், தலைவராகப் போவதற்கு வாழ்த்து தெரிவித்தும், ஸ்டாலினை கட்டிப்பிடித்து பாசமாக முத்தமளித்தார். இதனால் திமுக தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
தலைவர் பதவிக்கு ஸ்டாலினை தவிர இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தலைவராக அறிவிக்கப்படுவார். அதேபோல் பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாததால் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக பொருளாளராக அறிவிக்கப்பட உள்ளார்.