நாளை 5 மணியோடு முடிகிறது அத்திவரதர் தரிசனம் – பக்தர்கள் அதிர்ச்சி

புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:25 IST)
நாளை (ஆகஸ்டு 15) வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் 5 மணியோடு நிறைவடையும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மூலவர் வரதராஜ பெருமாளின் கருடசேவை நடைபெற இருப்பதால் மாலை 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி நாளான ஆகஸ்டு 16 அன்று காலை 5 மணிக்கே அத்திவரதர் தரிசனம் தொடங்கும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து முடித்த பின்பே நடை சாத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்