தேர்தல் என்பது முடிவல்ல; மக்கள் பணியில் முடிவில்லை! – கமல்ஹாசன் அறிக்கை!
புதன், 7 ஏப்ரல் 2021 (11:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் என்பது முடிவல்ல என கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யத்திற்கு ஓரளவு வாக்குகளும், கோவை தெற்கில் கமல்ஹாசனின் வெற்றியும் மய்யத்தாருக்கு எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் தேர்தல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன் “தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னை பொறுத்தவரை இந்த தேர்தல் புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் புதிய அனுபவம். மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பது முதன்மையானது” என தெரிவித்துள்ளார்.