மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த 21 ஆம் தேதி விருப்பமனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சில தினங்களில் தமிழகம் முழுக்க போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலும் இதனோடு கோவை, மதுரைக்குட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியிலும் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.