கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன் - கமல்!

சனி, 4 டிசம்பர் 2021 (11:24 IST)
கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

 
நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து குணமாகி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 22 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் பயனாக தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார்.
 
இருப்பினும் அவர் டிசம்பர் 3 ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். விரைந்து நலம்பெற வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். 
 
மேலும் மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கும் விக்ரம் படக்குழுவினருக்கும் என் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்