திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால்.. கமல்ஹாசன்

ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (20:04 IST)
திமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்றும் ஆனால் தலைமையிடம் இருந்து எந்தவித அழைப்பும் எனக்கு வரவில்லை என்றும் கமலஹாசன் கூறினார் 
 
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து தூது வந்தது உண்மைதான் என்றும் எங்கள் கட்சியில் இருந்தும் அவர்கள் கட்சியில் இருந்தும் சில நபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றும் தெரிவித்தார்
 
ஆனால் திமுக தலைமையில் இருந்து அழைப்பு எனக்கு நேரடியாக வந்தால் மட்டுமே அது கணக்கில் கொள்ளப்படும் என்றும் அவ்வாறு எந்தவித அழைப்பும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
எனவே திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய பேச்சுவார்த்தை நடந்தது என்பதை கமல்ஹாசனை ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்