மாணவர்கள் சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - கமல்

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (13:01 IST)
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவி திஷா ரவி என்பவர் க்ரேட்டா தன்பெர்கின் கருத்துகளை எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீஸார் திஷா ரவி வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக அவரை கைது செய்துள்ளனர். 
 
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பெங்களூரு மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் மாணவர்கள் சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்