டி.என்.சேஷனுக்கு புகழாஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்-அரசியல்வாதி!

திங்கள், 11 நவம்பர் 2019 (09:57 IST)
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்கள் நேற்றிரவு காலமானதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், உயரதிகாரிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய தேர்தல் வரலாற்றில் டி.என்.சேஷன் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பதையும் தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு அதிகாரமா? என ஒரு பிரதமரே வியக்கும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மறைந்த டி.என்.சேஷன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்தின் சக்தி வாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சேஷன். தைரியம் மற்றும் நம்பிக்கையின் உருவமாக நினைவுக்கூறப்படுபவர் டி.என்.சேஷன் எனவும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
முன்னதாக கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே டி.என்.சேஷன் அவர்களை நேரில் சந்தித்து சில சந்தேகங்களை தீர்த்து கொண்டார் என்பதும், தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் வந்து அரசியல் கட்சி செயல்பட வேண்டிய விதம் குறித்து கேட்டுக்கொள்ளலாம் என்று கமலுக்கு அவர் அனுமதி கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்