காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ், நேற்று அவரது நண்பர் விஜய் வீட்டில் சுடப்பட்டார். தலையில் குண்டடி பட்ட முகேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தலைமறைவாகியிருந்த விஜய் போலிஸில் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் பெருமாட்டுநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ரவுடி செல்வம் தலைமையிலான கும்பலில் விஜய் இருக்கிறார். இந்தக் கும்பலில் சேர சம்பவத்தன்று முகேஷை விஜய் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தைக் கேட்ட போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.