விஷ சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிப்பு.. உரிமையாளர்கள் 5 பேர் கைது

Mahendran

திங்கள், 24 ஜூன் 2024 (10:08 IST)
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலையின் உரிமையாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
விஷ சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பதும் சிபிசிஐடியினர் விஷ சாராயம் காய்ச்சியவர்கள், விற்பனை செய்தவர்கள் என பதினைந்து பேர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் தான் விஷ சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய ஆலை இன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த ஆலையின் உரிமையாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் சிலர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்