99 வயதில் 3 சக்கர நாற்காலியில் வந்து போராட்டம் நடத்திய வைகோவின் தாயார்

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (01:21 IST)
99 வயதில், நடக்க முடியாத நிலையில், பொது மக்களுக்காக டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் போராட்டம் நடத்தினார்.
 

 
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் திடீர் போராட்டம் நடத்தினார்.
 
தற்போது, 99 வயதாகும் வைகோவின் தாயார் மாரியம்மாள் நடக்க முடியாததால், அவர் மூன்று சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதோடு, திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், ராஜபாளையத்திலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலை தடைப்பட்டது. இதனையடுத்து, பேருந்துகள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.
 
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். ஆனால், காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கிய பொது மக்கள், டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் திடீர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்