''கல், கிரஷர் மற்றும் எம். சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காணத் துடிக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு''- இபிஎஸ் கண்டனம்

புதன், 28 ஜூன் 2023 (13:05 IST)
தமிழகத்தில் முறையாக அனுமதி பெற்ற கல், கிரஷர் மற்றும் எம். சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காணத் துடிக்கும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது என்றும்; குறிப்பாக கடந்த சில நாட்களாக சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத் துறை அதிகாரிகளும் கல்குவாரிகளைப் பார்வையிட்டு பல்வேறு புகார்களைக் கூறி, தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி, கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.

இதனால், தமிழகமெங்கும் எம். சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. குறிப்பாக, சென்னையில் மெட்ரோ ரயில் பணி மற்றும் அரசு மருத்துவமனைகள் கட்டும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே. இந்த விடியா திமுக அரசு, குறிப்பாக கனிமவளத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர்கள், கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் பேசி, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்