காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் தேவை: கி வீரமணி கருத்து!

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:51 IST)
காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் தேவை என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம், இளம் ரத்தம், கொள்கை , இலட்சியம் ஊசி மூலம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
கொள்கைகளை இலட்சியங்களை தெளிவாக தெரிந்து கொண்டு எதிரிகளை அடையாளம் கண்டிருப்பவர் ராகுல்காந்தி என்றும் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி வலியுறுத்தியுள்ளார்
 
ஜனநாயகத்தை மதவாத சக்திகள் தலைதூக்கும் சூழலில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்