கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தன்மையானது! – அதிமுக கே.பி.முனுசாமி கண்டனம்!

திங்கள், 12 ஜூலை 2021 (12:16 IST)
கடந்த சில நாட்களாக தனி கொங்குநாடு என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இதற்கு அதிமுக கே.பி.முனுசாமி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக நேற்றைய தினசரியில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில், தமிழகத்தை பிரிக்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.

ஆனால் பாஜகவின் கரு.நாகராஜன் உள்ளிட்ட சிலர் கொங்குநாடு பரிசீலனையில் இருப்பதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தனமானது; பிரிவினை வந்தால் தமிழ்நாட்டின் அமைதி பாதிக்கும். யாரையோ சிறுமைப்படுத்த வேண்டும் என பாஜகவினர் கொங்குநாடு என கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்