போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவி இறப்பு வழக்கில் நீதிபதி கேள்வி!

திங்கள், 18 ஜூலை 2022 (11:21 IST)
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதித்தது யார் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மகள் மரணம் குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் போராட்டம் நடத்த அனுமதி தந்தது யார் என்றும் மாணவியின் இறப்புக்கு காரணம் என்ன? என்றும் காவல் துறையை நோக்கி நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி வன்முறை சம்பவம் குறித்த விசாரணையை நீதிபதி கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார் 
 
பள்ளியில் பயின்ற 4500 மாணவர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதி திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்றே தெரிகிறது என்றும் கூறினார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்