இரட்டை இலை எங்கு இருக்கின்றதோ, அந்த பிரிவுக்குத்தான் ஆதரவு: ஜான் பாண்டியன்

சனி, 21 ஜனவரி 2023 (13:21 IST)
இரட்டை இலை எங்கு இருக்கின்றதோ, அந்த பிரிவுக்குத்தான் ஆதரவு: ஜான் பாண்டியன்
இரட்டை இலை எந்த பிரிவில் இருக்கின்றதோ அந்த பிரிவு அதிமுகவிற்கு தான் ஆதரவு என ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவுக்கு ஆதரவு கேட்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும் அதிமுகவுக்கு தனது ஆதரவு இன்று உண்டு என ஜான்பாண்டியன் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 
 
இந்த நிலையில் ஜான்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தபோது ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தான் தனது ஆதரவு என்றும் பொதுக்குழு மற்றும் இரட்டை இலை எந்த பிரிவு பக்கம் இருக்கிறதோ அந்த பிரிவுக்கு தனது ஆதரவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இருப்பினும் ஓபிஎஸ் அவர்கள் தன்னை சந்திக்க வருவதாகவும் அப்போது அவரிடம் இருவரும் சேர்ந்து ஒன்றாக ஒருங்கிணைந்து போட்டியிடுங்கள் என தான் வலியுறுத்த இருப்பதாகவும் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பாஜக போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் போட்டியிட்டால் அதன் பின் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்