தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மாவட்டத்தில் உள்ள துக்காட்சி ஊராட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன்., தோகமலை ஊராட்சி ஒன்றியசெயலாளர் வெங்கடேஸ்வரன்., கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியசெயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ்., தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 12 ஆயிரத்து 524- ஊராட்சி செயலாளர்களுக்கு நிலையான ஊதியம் பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு துவங்கபட்டது.இதன் மூலம் 25-ஆண்டு கால கோரிக்கையை ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர் நிலை ஊதிய அரசானையை கடந்த 30-ம் தேதியன்று தமிழக முதலமைச்சரும்., துணை முதலமைச்சரும் வழங்கி உள்ளார்கள்.