தலைமை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு

செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:35 IST)
தலைமை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணிய தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழி யர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ்  போன்ற உடைகளை அணியக்கூடாது என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே ஆண்கள் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார் கமீஸ் அணியலாம் என்றும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லெகின்ஸ் அணிய அனுமதி இல்லை என்றும் அசாம் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து ஊழியர்களும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் தினசரி ஊழியர்கல் மற்றும் நிரந்தர ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஆடை கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவுறுத்தலை கடைபிடிக்க தவறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்