இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் குமார் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.