சசிகலா குடும்பத்தினர்களை பெரும்பாலான தமிழக மக்களும், அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சிகளும் மன்னார்குடி மாஃபியா என்றே அழைத்து வருகின்றனர். இதற்கு இதுவரை சசிகலா உள்பட யாருமே பதில் சொல்லாத நிலையில் தற்போது சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் இதுகுறித்து கூறியபோது, 'திமுக எனும் மாபியா கும்பலுடன் மோத வேண்டிய தேவை இருப்பதால், தங்களை மன்னார்குடி மாபியா கும்பல் என்று அழைப்பது சரிதான்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் சசிகலாவுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். போயஸ் தோட்டம் சசிகலா கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. தீபாவிற்கோ, தீபக்கிற்கோ அந்த சொத்தில் எந்தவித தொடர்பும் இல்லை. இவ்வாறு ஜெயானந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.