தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான் - கருத்துக்கணிப்பு தகவல்

சனி, 29 ஆகஸ்ட் 2015 (15:14 IST)
2016ல் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து ஜெயலலிதாவே தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.


 
லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இக்கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 34.1% மக்களும், திமுகவுக்கு 32.6% மக்களும், தேமுதிகவுக்கு 4% மக்களும், பாமகவுக்கு 3% மக்களும், பாஜகவுக்கு 2.9% மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
 
யார் முதலமைச்சராக வருவார் என மக்களிடம் கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா என 31.56% மக்களும், ஸ்டாலின் என 27.98% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அதிமுக ஆட்சியின் சிறந்த திட்டங்கள் குறித்த கருத்துக்கணிப்பில், இலவச மிக்ஸி, க்ரைண்டர் வழங்கும் திட்டம் முதலிடமும். திருமண உதவி திட்டம் இரண்டாம் இடமும், மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.
 
இந்த கருத்துக்கணிப்பில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் பலத்த போட்டி நிலவியது. தேசிய மற்றும் பிற கட்சிகளின் தாக்கம் இதில் பெரிய அளவில் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்