ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் - ஜி.ஆர். அதிரடி

வெள்ளி, 3 மார்ச் 2017 (17:59 IST)
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அடையாளம் காட்டப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் யோசனை தெரிவித்துள்ளார்.


சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அவர்களுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ”சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

அதிமுக திமுக இரண்டும் ஊழல் கட்சிகள் தான். ஊழலை ஒழிக்க லோக் ஆயுத்தா சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்