ஜெயலலிதா உத்தரவில் அப்பல்லோ ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு!

திங்கள், 7 நவம்பர் 2016 (11:31 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த முறை அதிமுகவினர் தீபாவளியை கொண்டாடவில்லை. உடல் நலம் முன்னேறி வந்தாலும் இந்த முறை ஜெயலலிதாவிடம் இருந்து தீபாவளி வாழ்த்து வரவில்லை.


 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சசிகலா அப்பல்லோ ஊழியர்களுக்கு பண முடிச்சுடன் தீபாவளி பரிசு வழங்கியதாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்த இதழில் வெளியான செய்தியில், அப்பல்லோவில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு தேவையானவற்றை அவரே கேட்டுப்பெறுகிறார் என 4ம் தேதி அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி.ரெட்டி பேட்டி கொடுத்த உடன், அப்பல்லோவுக்கு ஒரு லாரியில் பரிசு பொருட்கள் வந்து இறங்கின.
 
அப்பல்லோ உரிமையாளர் பிரதாபி சி.ரெட்டி கொடுத்த பரிசு என சொல்லப்பட்டாலும், தீபாவளி கழித்து இந்த பரிசுப்பொருட்களை வழங்கியது சசிகலாதான். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ், வார்டுபாய்கள் என அனைவருக்கும் தகுதி வாரியாக பண முடிப்பு, இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது. 
 
ஜெயலலிதா சுயநினைவுடன் போட்ட உத்தரவின் பேரில் வழங்கப்பட்டதாக சசிகலா வழங்கிய இந்த பரிசுகளை பார்த்து சிரிப்பதா? சந்தோசப்படுவதா? என வித்தியாசமான உணர்வலைகளில் அப்பல்லோ ஊழியர்கள் மிதந்தார்கள் என்கிறது அப்பல்லோ வட்டாரம் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்