ஜெயலலிதா மிக மிக கவலைக்கிடம்: ரிச்சார்ட் ஜான் பீலே தகவல்!

திங்கள், 5 டிசம்பர் 2016 (15:44 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மிக மிக கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலே கூறியுள்ளார்.


 
 
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் நிலை மிக கவலைக்கிடமாகவே இருப்பதாக தொடர்ந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்நிலையில் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் ஜான் பீலே இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்வதேச ரீதியிலான சிகிச்சைகள் அளித்து வந்தாலும் அவருடைய உடல் நிலை மிக மிக மோசமாக உள்ளதாக கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவுக்கு அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகிவிட்டது. ஆனால் நிலமை மிகவும் மோசமாக உள்ளது. அவரை காப்பாற்ற முடிந்த அளவுக்கு சிறந்த சிகிச்சையை அளித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்