ஊசி, மருந்தால் ஜெயலலிதாவின் முகம் கருப்பானது, உருவம் மாறியது: அளந்து விட்ட அதிமுக அமைச்சர்!

சனி, 25 பிப்ரவரி 2017 (16:14 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதிமுகவினர் அதற்கு பதில் சொல்லும் விதத்தில் அளந்துவிடும் கதைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


 
 
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் ஒன்றில் வனத்துறை அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறிவரும் வேளையில் அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசினார்.
 
அப்போது பேசிய அவர், சினிமா கதாநாயகியாக, அழகான தலைவராக ஜெயலலிதாவை பார்த்து பழகிட்டோம். ஆனால் அவர் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்ததால் அவரது உருவம் மாறிப்போய் இருந்தது. ஊசி, மருந்தால் அவரது முகம் கருப்பாகி இருந்தது இதனால் தான் அவரது புகைப்படத்தை வெளியிடவில்லை என்றார்.
 
மேலும் இப்போது நான் இருக்கிற நிலையில் போட்டோ எடுக்க வேண்டாம், உடல் நலம் தேறி நல்ல டிரஸ் பன்னிட்டு நானே வெளியில் வந்து வாழ்த்து சொல்லுவேன் என ஜெயலலிதா கூறியதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
 
ஜெயலலிதா இறந்த பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்த போது அவர் பார்ப்பதற்கு அழகாகவும், நல்ல நிறத்துடனும், உருவம் மாறாமலும் தான் இருந்தார். ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இப்படி கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்