அம்மா உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் இலவச உணவு

புதன், 24 பிப்ரவரி 2016 (11:51 IST)
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் இலவச உணவு வழங்கப்படுகின்றது.


 

 
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் அனைத்து அம்மா உணவகங்களிலும் சர்க்கரை பொங்கலுடன் காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளும் இன்று இலவசமாக உணவு வழங்கப்படுகின்றது.
 
மேலும், மாநகராட்சி மருத்துவமனைகளில் இன்று பிறக்கும் குழந்தைகள் பெயரில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்