ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து: மீண்டும் சிறையா? விடுதலையா?

வியாழன், 2 ஜூன் 2016 (14:24 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்று பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.


 
 
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி வாதத்தை நேற்று முன்வைத்த கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துவிட்டு இப்போது ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மறைக்க பார்கின்றனர். சசிகலாவிடம் இருந்து பல்வேறு வழிகளில் ஜெயலலிதா பணம் பெற்றுள்ளார், அதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவைகளை கடனாக காண்பித்துள்ளார். இதை உயர் நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது என வாதாடினார்.
 
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், தன்னுடனயே வீட்டில் இருப்பவர்களிடம் கடன் பெற முடியாதா? அது இயலாத ஒன்றா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது பற்றியது இல்லை. தவறான வழியில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது பற்றியது.
 
அதாவது அரசாங்க பணத்தையோ அல்லது மக்கள் பணத்தையோ வைத்து சொத்து சேர்க்கப்படாதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது பற்றியது. ஒருவர் சொத்து சேர்ப்பதில் தவறு இல்லை. அதுவும் ஆரம்ப காலம் முதல் வருமான வரி கட்டும் ஜெயலலிதா சொத்து சேர்த்தது வைத்திருப்பது தவறு இல்லை. ஆனால் அவர் தவறான வழியில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்தால் மட்டுமே அது தவறு என நீதிபதிகள் கூறினர்.
 
நீதிபதிகளின் இந்த கருத்து இந்த வழக்கில் முக்கிய பங்கு ஆற்றும் என கூறப்படுகிறது. ஜெயலலிதா அரசாங்கத்தை ஏமாற்றி சொத்து சேர்த்ததற்கான ஆதாரம் இருந்தால் தான் இந்த வழக்கில் அவரை தண்டிக்க முடியும் என கூறப்படுகிறது.
 
அதாவது ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், அவர் அரசாங்கத்தை எமாற்றி தான் அந்த சொத்துக்களை வாங்கினார் என ஆதாரத்தை அரசு தரப்பு நிரூபிக்காவிடில் இந்த வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும். இதனையடுத்து இந்த வழக்கில் ஜெயலலிதா மீண்டும் சிறைக்கு செல்வாரா அல்லது விடுவிக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்