அரசியலுக்காகவே ஜெ.இல்லம் கையகப்படுத்தப்பட்டது - நீதிபதிகள்

புதன், 5 ஜனவரி 2022 (11:42 IST)
பொது நோக்கம் இன்றி அரசியல் காரணத்துக்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது என நீதிபதிகள் கருத்து. 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்கும் அரசாணை பிறப்பித்தார். 
 
இந்த அரசாணையை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரிடமும் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் அரசியலுக்காகவே ஜெ.இல்லம் கையகப்படுத்தப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பொது நோக்கம் இன்றி அரசியல் காரணத்துக்காகவே ஜெயலலிதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்