இதுபற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ள நக்கீரன் கோபால் நான் தராசு பத்திரிக்கையில் பணியாற்றிய போது ஜெயலலிதா குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதில் ஜெயலலிதாவின் பெயரை செல்வி ஜெயலலிதா என்று குறிப்பிடாமல் வெறுமெனே ஜெயலலிதா எனக் குறிப்பிட்டு விட்டேன். அதனைப் படித்த அவர் தராசு ஆசிரியர் அலுவலகத்துக்கு அழைத்து என்னிடம் பேச வேண்டும் என சொல்லியுள்ளார். என்னிடம் போன் கொடுக்கப்பட்ட போது பயங்கரமான கெட்ட வார்த்தைகளால் கோபமாக திட்டினார். எனக்கு அதைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. எனக் கூறியுள்ளது.