சொத்து குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவின்படி அன்பழகனின் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

திங்கள், 27 ஏப்ரல் 2015 (13:01 IST)
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் இன்று எழுத்துப் பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
 
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இந்த வழக்கில் பவானி சிங் வாதத்தை பொருட்படுத்தத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, க.அன்பழகனும், கர்நாடக அரசும் தங்களது எழுத்துப்பூர்வு வாதத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் வழிகாட்டி இருந்தது. 
 
அன்பழகன் தரப்பில் எழுத்துப் பூர்வ வாதத்தை நாளைக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, உடனடியாக 81 பக்கங்கள் கொண்ட வாதத்தை அன்பழகன் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்தார்.
 
அதில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை நீதிபதி குமாரசாமி கேட்டிருந்தார்.
 
அதற்கு முழுமையாக விளக்கம் அளிக்கும் வகையில், கூட்டுச் சதி எவ்வாறு நடைபெற்றது, அதில் ஈடுபட்ட நபர்கள் என முழுமையான தகவல்களை எடுத்துக் கூறி எழுத்துப் பூர்வ வாதம் அமைந்திருப்பதாக வழக்குரைஞர் தரப்பு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்