கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.
இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயகுமார், பழைய நிகழ்வுகளை பற்றி ஆராய்ச்சி செய்வதால் ரஜினிகாந்திற்கு என்ன பி.ஹெச்.டி பட்டமா கொடுக்க போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரண்பாடாக உள்ளார். அனைவரும் மதிக்கும் பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்தை அவர் தவிர்த்திருக்கலாம். பத்த வச்சுட்டியே பரட்ட, என்பது போல அவரது கருத்து தற்போது பற்றி எரிகிறது. எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும்? என்று யோசிக்க வேண்டும். கடந்த காலத்தை பற்றி, பழமையை பற்றி பேசி பின்னுக்கு போய்விடக்கூடாது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.