சென்னையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் ஓபிஎஸ் பிரிவில் இருந்து கோவை செல்வராஜ் கலந்து கொண்ட நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி பிரிவில் இருந்து கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவிலிருந்து நாங்கள்தான் கலந்து கொண்டு உள்ளோம் என்றும் கோவை செல்வராஜ் எந்த கட்சியில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது