பாஜக அடக்கி வாசிப்பது நல்லது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

புதன், 19 ஏப்ரல் 2023 (15:45 IST)
பாஜக அடக்கி வாசிப்பது நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது . இரு கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பாஜக மேல் இடத்தில் உள்ளவர்கள் அதிமுகவுடன் தான் கூட்டணி என்று கூறியுள்ளனர் என்பதும் எடப்பாடி பழனிச்சாமி கூட அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் பேசிய போது பாஜக அடக்கி வாசிப்பது நல்லது, அதுதான் நாடாளுமன்ற தேர்தலுக்கு நல்ல விஷயமாக அமையும், புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பாஜகவினர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்