யாரும் வரக்கூடாது, நாங்கள் விடமாட்டோம்: ஆலோசனையில் முதல்வர்

ஞாயிறு, 22 ஜனவரி 2017 (10:56 IST)
ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அதுவரை யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

 
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டுவந்ததை அடுத்து இன்று காலை 10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆனால் போராட்டக்காரர்கள் அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர தீர்வு தான் வேண்டும் என போராடி வருகின்றனர்.
 
இதனால் தமிழக அரசு இன்று அறிவித்த ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விட மாட்டோம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். யாரும் வரக்கூடாது, யாரையும் அனுமதிக்கமாட்டோம். அரசியல்வாதியே உள்ளே வராதே போன்ற கோசங்களை எழுப்பி கடுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 
ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற கூடாது, மீறி நடந்தால் அது போராட்டத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்று வாடிவாசலில் போராட்டக்காரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். மதுரை பகுதிகளில் ஒவ்வொரு இடமாக ஜல்லிக்கட்டு நடந்த சென்று வருகிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் போராட்டக்காரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்