இந்நிலையில், தமிழகத்தில் வலுப்பெற்று வந்த தென் மேற்கு பருவமழை, வட மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில், வடமேற்ற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. மேலும், வழிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.