நான்தான் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் மகள் என கூறிய மோசடி பெண் கைது!

செவ்வாய், 7 மார்ச் 2017 (15:45 IST)
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மகள் நான் என்று, பெண் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்  டுவிட்டர் வீடியோவில் எனது பெயர் ப்ரியா மஹாலட்சுமி. இவ்ளோ நாட்களாக, சசிகலாவுக்குப் பயந்தே தலைமறைவாக இருந்தேன். அவர் என்னைக் கொன்றுவிடுவேன் என்றெல்லாம் மிரட்டியுள்ளார். இனியும் பயப்படக்கூடாது என்பதற்காக, துணிந்து  உண்மையை சொல்ல வந்துள்ளேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 
இந்நிலையில் முதல்வர் ஜெவின் மகள் நான் என்று கதையளந்த இவரது வார்தைகளை நம்பி சிபாரிசுகளுக்காக இவரது  வீட்டிற்கு இரசியமாக வந்து சென்ற வி.ஐ.பி.க்கள் ஏராளம். அ.தி.மு.க.காரரான கோவிந்தன் தந்த புகாரின் பேரில் கைது  செய்திருக்கின்றனர்.

 
பெரும் செல்வந்தர்கள் பலரிடமும் ஜெயலலிதாவின் மகளாகத் தன்னைச் சொல்லி ஏமாற்று வேலைகளை ஒரு பெண் செய்து  வருவது மேலிடத்தின் கவனத்திற்கு செல்ல உடனடியாக அந்தப் பெண்ணை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  அதன் பின்னரே களமிறங்கிய போலீஸ் பிரியாவை கைது செய்திருக்கின்றனர். தன்னை கைது செய்ய வந்த போலீசிடமும்  பிரியா தான் முதல்வரின் மகள்தான் என்று அசராமல் கூறியிருக்கிறார்.
 
நாமக்கல்லை சேர்ந்த மேகநாதன் தன்னுடைய மகனை மருத்துவ கல்லூரியில் தனது செல்வாக்கை கொண்டு சேர்த்து  விடுவதாக கூறி 30 இலட்ச ரூபாயினை பிரியா மோசடி செய்துவிட்டதாக தந்த புகாரினையடுத்து ஏற்கனவே மோசடி வழக்கில்  கைதாகி சேலம் பெண்கள் கிளைச் சிறைச்சாலையில் காவலில் இருந்த பிரியாவை சிபிசிஐடியினர் மீண்டும் கைது செய்தனர்.
 
முதலில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரால் விசாரிக்கப்பட்ட பிரியா மீதான மோசடி வழக்கு பிறகு சிபிசிஐடியினரின்  விசாரணைக்கு மாற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்