அமைச்சர் எஸ்பி வேலுமணி உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு: எடப்பாடி அணிக்கு வந்த சோதனையா இது?

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (10:50 IST)
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
கோவையில் உள்ள அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர் அன்பு என்பவர் வீடு, மேலும் கோவை மாநகராட்சி ஒப்பந்தக்காரர் சந்திரசேகர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
அமைச்சர் வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இருக்கும் மிக முக்கியமான அமைச்சர். மிகுந்த செல்வாக்கோடு வலம் வரும் அமைச்சர் அவர். அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது எடப்பாடி அணிக்கு வந்துள்ள முதல் சோதனையாக பார்க்கப்படுகிறது.
 
இதே போலதான் தினகரனுடன் மிக நெருக்கமாக செல்வாக்கோடு இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவரது நண்பர்கள் உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதன் பின்னர் தான் விஜயபாஸ்கர் மற்றும் தினகரனுக்கு சோதனை ஆரம்பிதத்து.
 
அதே போல தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருக்கமாக இருக்கும் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடந்துள்ளது சற்று சந்தேகத்துடனே பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் ஒப்பந்தக்காரர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்