‘ஈஷா மையம் போலி ஆவணங்கள் மூலம் நில ஆக்கிரமிப்பு’ - போராட்ட குழு ஆதாரம்

சனி, 17 டிசம்பர் 2016 (16:12 IST)
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் உள்ள 44.3 ஏக்கர் உபரி நிலத்தை ஈசா யோகா மையம் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும் ஒரு அங்குலம் கூட சொந்தமானது அல்ல என்பதற்கான ஆதாரங்களை நிலமீட்பு போராட்டக்குழுவினர் வழங்கினர்.


 

கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அருகே உள்ள முள்ளாங்காடு என்ற இடத்தில் அரசின் உபரி நிலம் 44 ஏக்கர் உள்ளது. இதனை, 1992ஆம் ஆண்டு 46 பேருக்கு அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது.

பழங்குடியின மற்றும் பட்டியல் மக்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட அந்த 44 ஏக்கர் நிலத்தை, இந்நிலையில், ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்து மின் வேலி அமைத்து கட்டிடங்கள் கட்டி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 44 ஏக்கர் நிலத்தை தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி, நில மீட்பு இயக்கத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆதித்தமிழர் கட்சி மற்றும் சமூக நீதி கட்சிகளின் போராட்டக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலி ஆவணங்கள் மூலம் ஈஷா யோகா மையம் அபகரித்ததை கண்டித்து மலைவாழ் மக்கள் மற்றும் தலித் மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து திரும்ப ஒப்படைப்பதாக அதிகரிகள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், போலி ஆவணங்கள் மூலமாக அரசு ஊழியர்கள், அவர்களின் உறவினர்கள், நில உச்சவரம்பு சட்டத்திற்குட்பட்டு அதிகம் நிலம் வைத்திருப்பவர்கள், போலியான முகவரி அளித்தவர்கள் என அனைவரது விபரத்தையும் எழுத்துப்பூர்வமாக விசாரணை அதிகாரிகளிடம் அளித்தனர்.

இதனை பெற்றுக்கொண்ட பேரூர் வட்டாட்சியர் முரளி, போலி ஆவணங்கள் என்றால் அதனை விசாரிக்க உத்தரவிடுவதாகவும், 1977இல் பட்டா போடப்பட்டிருக்கும் நபர்களின் அன்றைய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்கும் வரை மேற்படி இடத்தினை விற்கவோ, வாங்கவோ அனுமதி தரக்கூடாது என பதிவாளருக்கு தெரிவிப்பதாகவும் உறுதியளித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்