இவரும் சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆந்திராவில் குவாரி தொழிலில் ஈடுபட்டுவந்த அவர் சினிமாவின் பக்கமாக கொஞ்ச நட்களுக்கு முன் தலைகாட்டினார். பிறகு காணமல் போய்விட்டார். இப்போது அவர் திவாகரனின் ஆதரவாளராக செயல்படுவதாகவும், அதே சமயம் தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் அதில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.