தமிழச்சி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் உண்மை குற்றவாளி இல்லை. கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜ், தமிழச்சி கூறியதற்கு, சுவாதி குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.